Categories
மாநில செய்திகள்

நாளை முதல் நேரக்கட்டுப்பாடு… காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும்… முதல்வர் அதிரடி உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் எனவும், மளிகை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வெளியே வருகிறாரகள்.

அப்படி வந்தாலும்கூட உத்தரவை மதிக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல்துறை வழக்குப்பதிவு செய்தாலும் கூட பொதுமக்கள் அதை சரியாகப் பின்பற்றப்படவில்லை. நோயினுடைய வீரியம் அதிகமாக இருக்கிறது. அந்த சீரியஸ் இல்லாமல் பொதுமக்கள் அதிகம் வெளியே வருகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக புகார்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த கால அளவு என்பது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பொதுமக்களும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களைப் பொறுத்தவரை தேவையில்லாமல் வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நேற்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார். தற்போது கால அளவு குறைக்கப்படுவதன் மூலமாக பொது மக்கள் நடமாட்டத்தை மீண்டும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்த நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |