Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசினார்.பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனி சாமி கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் மூலம் காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளோம்.

Related image

சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |