Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில்… “ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் ஈபிஎஸ் தொடங்கி வைத்தார்.!!

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அம்மா பூங்காவை திறந்தபின் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார் முதல்வர். அத்துடன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சியும்  செய்தார்.

Image result for ஈபிஎஸ்

அதன்பின் முதல்வர் பழனிசாமி  பேசுகையில், கச்சுப் பள்ளியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றார்.  திருச்செங்கோடு- சங்ககிரி- கொங்கணாபுரம் பகுதிகளுக்கு செல்ல 4 வழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு  50 லிட்டர் பால் கிடைக்கும் வகையில் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தாரமங்கலம் மேச்சேரி சாலையில் காய்கறி சந்தை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Categories

Tech |