நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.
வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது.
இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்யப்போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்.12,13,16இல் நாங்குநேரி தொகுதியிலும், அக்.14,15,18இல் விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/AIADMKOfficial/status/1179738059929075718