Categories
மாநில செய்திகள்

“தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும்”… முதல்வர் பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும், தமிழ்மக்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட வாழ்த்தி, எனது மனமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தாண்டில் தமிழர் தம் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும், தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும், அவர்தம் வாழ்வில் இன்பஒளி பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ்மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |