Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா… பாதிப்பு 1,267 ஆக உயர்வு.. முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் தமிழக அரசு அதிக முன்னுரிமை தந்து வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதே முக்கியம் என அரசு கருதுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118ல் இருந்து 180 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |