தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளி தேர்வு குறித்து ஆலோசிக்க முடியும் என்று தெரிவித்தார்.