Categories
அரசியல்

நிச்சயம் ஊரடங்கு நீட்டிப்பு….! ”கலெக்டர் ஒத்துழைப்பு முக்கியம்” முதல்வர் அறிவுறுத்தல் ….!!

ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை  குறைக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர்,  “கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என  இந்த நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே தற்போது பச்சை மண்டலமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் ஒரு சில தொழில்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு அரசு ஒரு முடிவை எடுக்கும், அந்த முடிவை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார். அதே போல சிவப்பு பகுதியை ஆரஞ்சு பகுதிகளாக  மாற்றுவதற்கான ஒரு துரித நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நிச்சயமாக நீட்டிக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை  குறைக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு நடவடிக்கை என்பது மிக முக்கியமாக இருக்கிறது.

Categories

Tech |