விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. கொரோனா காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்று முதல்வர் கேட்டுக்ண்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. சாதி, மதம், மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக கொரோனாவை தடுக்க போராடுவோம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு.
கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதால் குடும்பம், சமுதாயம், நாட்டை காப்பாற்றலாம். கொரோனா நோய் பரவலைத் தடுப்பது காலத்தின் கட்டாயம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
கொரோனா நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள். மருத்துவ உதவி தேவை எனில் 104 அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பணிகளுக்கு ரூ.3,780 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 10,158 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.