Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு இடமாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தண்ணீர் வசதி, கழிவறை, தாங்கும் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

மே 10ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என சிஎம்டிஏ தெரித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார்.  திருமழிசை சந்தையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை நிறைவடைந்த பின்னர் கோயம்பேடு தற்காலிக சந்தை திருமழிசையில் திறக்கப்படும் தேதி குறித்து முக்கிய அதிகாரரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |