Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு!

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தண்ணீர் வசதி, கழிவறை, தாங்கும் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மே 10ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என சிஎம்டிஏ தெரித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பார்வையிட உள்ளனர். தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் குறித்து இருவரும் ஆய்வு செய்து எப்போது திறக்கலாம் என அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |