Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா… மொத்தம் 16 ஆக உயர்வு!

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 74 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |