நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று சேலம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளளார் .
வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேலத்தில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து தன்னுடைய முதல் பிரசாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி இருக்கின்றார் . சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டில் கூட்டணி கட்சியினருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் வேட்பாளர் அறிமுகம் செய்யும் விழா_வில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் தமிழக முதலவர் பேசினார் .
அப்போது அவர் பேசுகையில் , இந்தியாவிலேயே வளமான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் சிந்திக்க கொண்டிருக்கின்ற வேளையில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் . இந்த நாட்டை காக்க வேண்டும் . அண்டை நாடுகள் எல்லாம் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி . கலைஞர் பேச முடியாமல் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலின் தலைவராக இருக்க முடியவில்லை . செயல் தலைவாராகத் தான் இருந்தார் காரணம் அவர் மீது திமுக நம்பிக்கை . நாட்டு மக்கள் எப்படி அவர் நம்பிக்கை வைப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.