Categories
மாநில செய்திகள்

CM ஸ்டாலினின் கடிதம் வரவேற்கத்தக்கது…. சட்டப்பேரவையில் இதை பண்ணுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் அரசு பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களின் பயிற்சி பெறுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தென்மண்டல ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் கிடையாது. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும், அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஜனவரி‌ 9-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தின் போது அரசு இதை வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |