மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில் 1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் .
இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு இந்த உத்தரவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஒரிசா, பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 11 மணி அளவில் அனைத்து மாநிலஅமைச்சர்களும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்தது. இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது மகாராஷ்டிர முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.