ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கேரள மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஓணம் பண்டிகை அன்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்க கடத்தல் வழக்கு, பொருளாதார பாதிப்புகளால் ஏற்பட்ட நெருக்கடி இவற்றிற்கு இடையே, கல்வி, கட்டமைப்புத் துறைகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள பினராயி விஜயன், 100 நாட்களுக்குள் இவை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவதாகவும், உணவுப் பொருள் தொகுப்பு விநியோகம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்படும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.