அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சூழலில் அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளி என்பது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விதான் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக உடைய முகமாக யார் முன் நிறுத்தப் போகிறார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அமைச்சர் செல்லூர் ராஜு கருத்தைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் அதிமுகவில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது.
குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது எடப்பாடி பழனிச்சாமியையா ? அல்லது ஓ. பன்னீர்செல்வத்தையா ? என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த குழப்பம் என்பது கடந்த செப்டம்பர் 18ம் தேதி நடந்த உயர்நிலை கூட்டம் ஆகட்டும், செயற்குழு கூட்டம் ஆகட்டும் இந்த இரண்டு கூட்டங்களிலும் இருந்தது. காரசாரமான விவாதங்கள் இரு தரப்புக்கும் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போதைய நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பொருத்தவரை நாளை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என்றுதெரிகின்றது . முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை நிச்சம் வெளியிடும் என்று தகவலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக நாளை அறிவிக்காவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சி மீதான நம்பகத்தன்மை என்பது மிக கெட்டுவிடும் என்ற ஒரு கருத்து என்பது மூத்த நிர்வாகிகளிடம் தொடர்ச்சியாக இருக்கிறது.