Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனோவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகள் துரிதமாக செயல்பட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பச்சை மண்டல பகுதியில் ஊரடங்கை தளர்த்துவது குறித்தும், மே 3ம் தேதி பிறகு எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தர ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று தொழில் நிறுவனங்களை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதில் எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என்பது குறித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிறு,குறு , நடுத்தர நிறுவனங்களுக்கு சிற்பபு சலுகை குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

Categories

Tech |