Categories
அரசியல் மாநில செய்திகள்

நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்!

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.

ஆளுநர் உரையின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி:

கோலம் போடுபவர்கள் அவரவர் வீட்டு வாசலில் போட்டால் பிரச்னை இல்லை. அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டு அந்த வீட்டு உரிமையாளர் புகாரளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ்: நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் வினா எழுப்பினார்.

முதலமைச்சர் பழனிசாமி:

பேச்சாளர் நெல்லை கண்ணன் பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து பேசியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கமளித்தார்.

Categories

Tech |