Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.9,000,00,00,000 வேணும்…. தமிழகத்துக்கு கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் கடிதம் ….!!

கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பு ஈடுசெய்ய தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , தடுப்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரூ.4,000 கோடி தேவை என்று கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இன்றைய சூழலில் தமிழகத்துக்கு 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. புதிதாக மருத்துவர்கள் , செவிலியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் மேற்கொள்ளக்கூடிய தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டுமென்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |