தமிழகத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தளர்வு காரணமாக ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பேருந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அனுமதி என்பது கொடுக்கப்பட்டு,புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக பல்வேறு விஷயங்களை மீட்டெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்பது அரசுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் புறநகர் ரயில் சேவை என்பது மிகவும் அத்தியாவசியமானது. பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக பல லட்சம் பேர் சென்னை புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வரக் கூடிய நிலையில் அதனை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயிலுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.