Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் நின்றபடி கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Image result for முதல்வர் சுதீஷ்

 

வாக்குசேகரிப்பு பிரசாரத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,  நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிய போது அபிநந்தனை பாதுகாத்து மீட்ட பெருமை பிரதமர் மோடி சாரும். மோடிக்கு தான் எதிரிகளை தூள் துளாக்கும் தைரியம் உள்ளது. இந்திய நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடியால்தான் முடியும் என்று முதல்வர் பேசினார்.

Categories

Tech |