முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். “தேவையற்ற பழைய சட்டங்களை நீக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 1,450 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்பட்டு வரும் முப்படைக்கும் இனி ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். தற்போது ராணுவம், விமானப்படை, கடற்படை என தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் நிலையில் முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். பாதுகாப்பு படைத்தலைவர் (Chief of Defence Staff ) என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று மோடி தெரிவித்துள்ளார்.