இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தை விமர்சித்து ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், “கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களையும் அவர்களை தூண்டிவிடும் அரசியல் தலைவர்களையும் யார் மீட்கப்போவது? அஸ்ஸாமைச் சேர்ந்த வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பவர்களுக்கு யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்? தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை திணிப்பவர்களுக்கு நாம் வகுப்பு எடுக்க வேண்டும்.