டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார். காலை 11 மணி முதல் 2 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடனும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் இந்த ஆலோசனை மேற்கொள்கின்றார்.
டெங்குவை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது .அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக 5 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நகராட்சி , ஊராட்சி , பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் , பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசிக்கிறார்.