கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க கருப்பு பூஞ்சை என்ற நோய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஆம்போடெரிசின் என்ற மருந்து தேவைப்படுகின்றது. கருப்பு பூஜை தொற்று அதிகரித்த காரணத்தினால் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய 1,790 மருந்து குப்பிகளில் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. எனவே 30,000 ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை உடனே வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.