கொரோனா காரணமாக நன்றி சொல்வதற்காக கைகுலுக்க வந்த குழந்தைக்கு முதல்வர் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யில் நடைபெறக்கூடிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அங்கு காத்திருந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியுள்ளார்.
இதையடுத்து அதில் ஒரு குழந்தை குழந்தை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கை குலுக்க வந்தபோது இருகரம் கூப்பி வணக்கம் சொல்லியுள்ளார். இதனால் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் கைகுலுக்கமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து அங்கிருந்து முதலமைச்சர் மதுரை அனுப்பானடி பகுதியில் தனியார் விடுதி ஒன்று ஓய்வெடுத்து விட்டு யானைமலை ஒத்தக்கடை பகுதி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.