முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நேரங்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் காலம் என்பதால் பதட்டநிலை நீடித்து வருகிறது இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்களிலும் அரசியல் தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர் தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர் ஒருவர் இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டடியுள்ளார்
இந்த தகவலை கேட்டறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் உடனடியாக மோப்ப நாயுடன் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் ஆனது ஒரு பொய்யான வதந்தி என்பது கண்டறியப்பட்டது .
மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த செல்போன் எண்ணை ட்ரெஸ் செய்ததன் மூலம் மிரட்டல் விட்ட சுந்தர்ராஜன் என்னும் நபரை பள்ளிக்கரணை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் இந்த விசாரணையில் சுந்தர்ராஜன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்து உள்ளது இதனையடுத்து மீண்டும் மறுமுறை விசாரணையானது சுந்தரராஜன் அவர்களிடம் மேற்கொள்ளப்படுகிறது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.