கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவை இந்த சடங்கு சம்பிரதாயங்கள் ஒரு சில நொடிகளில் மழுங்கடித்து விடுகின்றன. ஐந்தறிவு கொண்ட ஜீவன் கூட தன் குட்டிகள் இடத்தில் அன்பை காட்ட துடிக்கும். ஆனால் கர்நாடக மாநில கிராமமொன்றில், பேய் பிடித்ததாக கூறி ஒன்றும் அறியாத மூன்று வயது சிறுமியை சாமியார் ராம்பால் பயங்கரமாக அடித்ததால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மூன்று நாட்களாக சரியாக சாப்பிடாமல், தூங்காமல் இருந்ததால் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், புத்தி மழுங்கிப் போய் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் பேய் பிடித்ததாக கூறி சிறுமியை பிரம்பால் அடித்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்திலும் ஏராளமாக நடந்துள்ளன. இப்படி அறிவை பயன்படுத்தாமல் புத்தி மழுங்கி திரியும் இவர்களை என்ன ஜென்மங்கள் என விமர்சிப்பது என்று சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.