பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் உணவிற்காக பரிதவித்து வந்த சிறுமியை கடத்தி ஒரு கும்பல் அறைக்குள் பூட்டி வைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி சிந்த் மாகாணத்தில் உணவிற்காக அலைந்து கொண்டிருந்த ஒரு சிறுமி, மர்ம கும்பலால் கடத்தப்பட்டிருக்கிறார். சிறுமியை பல நாட்களாக ஒரு அறையில் பூட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. எனவே, காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், சிறுமிகள் கடத்தப்படுவது, பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது போன்ற குற்றங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருப்பது, காவல்துறையினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.