கிரிஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பிறந்த 37வது நாளிலே குழந்தை இறந்ததற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து உலகமே ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றது. பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது புதிய மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கிரீஸ் நாட்டில் இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர், தற்போது 450 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ஏதென்ஸ் ஆஸ்பத்திரிக்கு, பிறந்து 17 வது நாளே ஆன ஒரு ஆண் குழந்தை மூக்கு வீக்கம் மற்றும் காய்ச்சல் காரணத்தால் கொண்டுவரப்பட்டது.அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 36வது நாளில் உயிரிழந்தது.
குழந்தையின் இறப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாட்டின் பிரதமர் கிரியோஸ் கோஸ் மிட்சோ டாகிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று காரணமாக நம் நாட்டில் பிறந்த 17வது நாளில்லிருந்து 37 வது நாள் வரை கொரோனா வைரஸை எதிர்த்து போராடியும் பலனில்லாமல் துரதிஸ்டவசமாக குழந்தை இறந்துள்ளது என்றும், மேலும் இந்தப் பிஞ்சு குழந்தை இறந்த நிகழ்வு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.