ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக நான்கு வயதுடைய சிறுமிக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் சில நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டில் தற்போது வரை சுமார் 2900 நபர்களுக்கு குரங்குமை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் கடந்த வாரம் பதின்ம வயதுடைய சிறுவர்களும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுடன் வசித்து வந்த ஒரு சிறுமிக்கும் தொற்று பரவியுள்ளது. எனினும், அதற்கான அறிகுறிகள் சிறுமியிடம் தென்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஜெர்மன் சுகாதார நிலைக்குழு, இந்த தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்வது அவசியம் என்று கூறி இருக்கிறது.