சென்னை அருகே கணவர் கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த வஉசி நகரைச் சேர்ந்தவர் தணிகைவேல். இவர் எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தணிக்கைவேலுக்கு மது பழக்கம் உண்டு. அவர் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அந்த வகையில்,
நேற்று முன்தினம் தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் குழந்தைகளையும் போட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் அவரை தூக்கில் தொங்கவிட்டு காவல் நிலைத்தில் எங்கள் இருவருக்குள் நடந்த சண்டையில் ஏற்பட்ட மன விரக்தியால் எனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை மீட்டு பிரேதப் சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வர மனைவியிடம் அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்ட போது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். பின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.