சிறுவன் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ன், பிரிட்ஜென்ட் என்ற பகுதியில் நேற்று முன்தினம் 5 வயதுடைய சிறுவன் காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு நதியிலிருந்து ஒரு சிறுவனின் சடலம் கண்டறியப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுவன் கண்டெடுக்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக விசாரிக்க தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இது பற்றி தகவலறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.