Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இறந்துவிட்டது”… கைவிட்ட மருத்துவர்கள்… 4 நாட்களுக்குப்பின் உயிர்பிழைத்த அதிசயம்..!!

குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு மகள்களையும் கிணற்றில் வீசியுள்ளார். இதையறிந்த கிராம வாசிகள் உடனடியாக இருவரையும் மீட்டனர். சிறுமியின் நிலைமை மோசமாக இருந்தது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இளையமகள் சோனி குமாரி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கோலி குமாரியின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு குழந்தைகளையும், கயா மாவட்டத்தில் உள்ள ஷெர்காட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் சிகிச்சை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், அவர்கள் மீண்டும் சிறுமிகளை அழைத்துச் சென்றனர்.

ஆனால் அனுக்ரஹா மகதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், இந்த குழந்தை கோமா நிலையில் இருப்பதாக நம்பி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். நான்கு நாட்கள் ஐ.சி.யுவில் இருந்த சிறுமி சுயநினைவு அடைந்து உயிர் பிழைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |