தேவையான பொருட்கள்:
சோளம் – 100 கிராம்
கம்பு – 25 கிராம்
திணை – 25 கிராம்
கேழ்வரகு – 100 கிராம்
கொள்ளு – 50 கிராம்
பாசிப்பருப்பு – 25 கிராம்
நெய் – 100 மில்லி
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
சோளம் ,கம்பு, தினை, கேழ்வரகு ,கொள்ளு ,பாசிப்பருப்பு ,எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து .ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரை தூள் ,ஏலக்காய்த்தூள், சேர்த்து நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு:
சத்து மாவு உருண்டை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை ,பார்லி ,ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து இதேபோல சத்துமாவு உருண்டை தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும்.