குழந்தை முன்பாக காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள முதனை கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சந்தியாவும், அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்திருக்கின்றனர். இதன் காரணத்தினால் சந்தியா கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து சந்தியா வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு வேல்முருகன் பல காரணங்களை கூறி தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சந்தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தியா மீண்டும் வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது அவரின் தங்கை மற்றும் தாயார் வரதட்சணை கேட்டதாக தெரியவந்துள்ளது. இது பற்றி சந்தியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வேல்முருகனை அழைத்து வந்து காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். பின்னர் வேல்முருகன் சந்தியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். அதற்கு பிறகு இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றிருக்கிறது.