உலகில் உள்ள சுமார் 100 நாடுகளில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), இந்த தினத்தை 2002 ஆம் வருடத்தில் தோற்றுவித்தது. உலகெங்கிலும் பத்தில் ஒரு குழந்தை வேலை செய்ய கட்டாயப்படுத்தபடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000 ஆம் வருடத்தில் இந்த விகிதம் குறைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் சுமார் 152 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
அதில் 72 மில்லியன் குழந்தைகள் அபாயமான இடங்களில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமானது, ஐந்து வயதிலிருந்து 17 வயது குழந்தைகள் வரை பலருக்கு அடிப்படை கல்வி, மருத்துவ உதவி, ஓய்வெடுக்கும் நேரம் போன்ற அடிப்படையான சுதந்திரங்களை அளிக்க கொண்டுவரப்பட்டது.
இந்த தினத்தில் குழந்தை தொழிலாளர் முறையை முழுவதுமாக நீக்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடப்பது வழக்கமான ஒன்று. எனினும் தற்போது கொரோனாவினால் எளிமையான நிகழ்வுகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கான செயல்பாடுகள் நடக்கிறது.
அதில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதை அறிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அவர்களை மீட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் சிறப்பு பயிற்சி பள்ளியில் சேர்த்து, சீருடை மற்றும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.