Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” மறுக்கப்படும் குழந்தைகளின் கல்வி…. தடுக்கப்படும் நாட்டின் வளர்ச்சி….!!

எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச் செல்வம் என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ஆண்டுதோறும் இந்த பிரச்சனையின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் இருக்கும் 1.9 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இதில் 152 மில்லியன் பேர் கட்டாய தொழிலாளர்களாகவும், 73 மில்லியன் பேர் அபாயகரமான தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பது வருத்தம் அளிக்கும் செய்தி. சர்வதேச தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக கடைபிடித்து வந்தது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஐநா சபை அதிகாரப்பூர்வமாக இந்த நாளை உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக அறிவித்தது. 2025 ஆம் ஆண்டுக்குள் எல்லா குழந்தைகளுக்கும் கல்வியும், சமூக பாதுகாப்பு வழங்கி குழந்தை தொழிலாளர்களற்ற சூழலை உருவாக்குவதே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம்.

Categories

Tech |