குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படையில் இதன் நோக்கம் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த கடைபிடிக்கப்படுகிறது.
2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஹோட்டல்கள் இது போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியரை வேலையில் அமர்த்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள், உடல் ரீதியான பாதிப்பு, மனரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு. சிறுவர்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அதை வளர்ப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம்கள் நடத்தலாம். குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான். ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவோம் அவர்களின் வருங்காலத்தை இனிதாக்குவோம்