Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் போக மாட்டேன்” மாணவிக்கு திருமணம்…. போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற இந்த மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் அந்த மாணவியைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவியை அப்பகுதியில் வசிக்கும் பாபு என்பவர் திருமணம் செய்தது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்று மாணவியின் தாய் தகராறு செய்துள்ளார். அப்போது அவரின் தாயார் பாபுவின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரித்தபோது அந்த மாணவி தனது பெற்றோருடன் செல்வதற்கு மறுத்துள்ளார். ஆனால் அந்த மாணவிக்கு இன்னும் திருமண வயது வராததால் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Categories

Tech |