Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ரொம்ப சேட்டை பண்றான்” குழந்தைக்கு நடந்த கொடூரம்…. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்…!!

குறும்பு செய்ததால் பெண் குழந்தையை சுவரில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூசை மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சூசைமேரி வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தனது குழந்தைகள் கீர்த்தி மற்றும் ஆபெல் ஆகியோரை பீர்க்கன்காரணை காமராஜர் நகரில் வசித்து வரும் தனது சகோதரியான டார்த்தியிடம்  அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் டார்த்தி  இறந்துவிட்டதால் அவரின் மகளான மேரி குழந்தைகளைப்  பராமரித்து வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஆபெல்  திடீரென வீட்டில் மயங்கி விழுந்து விட்டதாகவும், அவனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சூசைமேரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைக்கு சென்ற சூசைமேரியிடம் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையின் உடலில் தீக்காயங்களும், நகக்கீறல்களும் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மேரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடிக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது ஆபெல் குறும்புத்தனமான சேட்டைகளை செய்ததால் கோபத்தில் மேரி அவரை அடித்தும் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மேரி சிறுவன் என்று கூட பாராமல் ஆபெலை சுவரில் தள்ளியதால் மயங்கி விழுந்து அவர் இறந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |