குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். பின்னர் அவர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகித்துள்ளனர். இந்தப் பிரசுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 63830 71800, 93845 01999 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.