Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தை மீட்புப்பணி 27 மணி நேரத்தை தாண்டியது….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்தை தாண்டியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் 90 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும். குழிதோண்டிய பின்னர் கண்ணதாசன், திலீப் குமார் மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக அவசர சிகிச்சையளிக்க அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டுள்ளன.ஒரு நாளைக் கடந்தும் குழந்தை இன்னும் மீட்கப்படாதது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |