Categories
தேசிய செய்திகள்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை…” இந்த தேதியில் கூட்டிட்டு போங்க”… வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவில் நடப்பாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய காரணம் போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டு வந்தது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்கு உள்ள கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். போலியோவை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும், அதை செயலிழக்க செய்யும் சொட்டு மருந்தை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |