கர்ப்பிணி ஒருவர் வீட்டில் பிரசவம் பார்த்தபோது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் விஜயவர்மன்- அழகம்மாள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து விஜயவர்மன் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்ததால் அழகமாளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு கொடுக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இயற்கை முறையில் பிரசவம் பார்க்க நினைத்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார அலுவலர்கள் விஜயவர்மன் வீட்டுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு அழகம்மாளிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் அழகம்மாளுக்கு பிரசவம் பார்க்கும் போது அவருக்கும் அவருடைய குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று கடிதத்தில் கையொப்பம் எழுதி வாங்கிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டில் பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தை பாதியில் வந்த நிலையில் அழுகம்மாளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் குழந்தையை வெளியே எடுக்கப்பட்ட போது அழுகி இருந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் விஜயகாந்த் குடும்பத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்ப காலத்திலேயே சுகாதாரத் துறை அலுவலர்கள் பலமுறை எச்சரித்தும் அழகம்மாள் குடும்பம் உதாசீனப்படுத்தி வந்ததால் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.