இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்த புகாரியில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி காவல் துறையினர் சோதித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் ரேச்சல் டி சோசாஎன்ற குழந்தைகள் நல ஆணையர், லண்டன் நகர காவல் துறையினரிடம் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த வருடம் கருப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி பெண் அதிகாரிகள் சோதித்தனர்.
அவர்கள் சிறுமிகளின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக சோதனை செய்தார்கள். அந்த சமயத்தில், சிறுமிக்கு மாதவிடாய் இருந்தது. எனினும் பெண் காவல்துறையினர் அவரிடம் மரியாதையாக நடக்கவில்லை. இந்த பிரச்சனை குறித்து காவல்துறையினர் மன்னிப்பு கோரினர்.
நாட்டில் துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சோதனை என்னும் பெயரில் இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை சுமார் 650 சிறுவர்களின் உடைகளை நீக்கி சோதனைகள் நடந்திருக்கிறது.
எனவே, சிறுமிகளை மதிப்புடன் நடத்த வேண்டும். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சட்ட வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ரேச்சல் டி சோசா குறிப்பிட்டிருக்கிறார்.