Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில் இந்த ஆண்டு சிக்கிய குழந்தைகள்….!!

இந்தியாவில் இந்தாண்டு ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் கிண்றறில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 27  மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அவரை மீட்பதற்காக பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த விபத்தைப் போன்று இந்தியாவில் நடப்பாண்டில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு.

21 பிப்ரவரி – மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அம்பேகன் நகர் அருகே இருக்கும் தொரண்டாலே கிராமத்தில் ஆறு வயது சிறுவன் ரவி பண்டிட் பில், 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழந்தார். பின்னர் அவரை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து மீட்டன.

22 மார்ச் – ஹரியான மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பால்சாமந்த் கிராமத்தில் நதீம் என்ற ஒன்றரை வயது சிறுவன் 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அதைத் தொடர்ந்து 48 மணி நேர போராட்டத்திற்குப் பின் அச்சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

14 ஏப்ரல் – உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் 110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுவன் சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.

20 மே – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயுள்ள மெலினா கிராமத்தில் விளைநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமி சீமா ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். அதைத் தொடர்ந்து 14 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

 

6 ஜூன் – பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே சங்ரூர் மாவட்டத்தில் ஃபத்தேவீர் என்ற இரண்டு வயது சிறுவன் 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 108 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட அச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் மணப்பாறையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துகள் அனைத்தும் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளாலேயே நடந்துள்ளன. எனவே இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |