Categories
உலக செய்திகள்

கனடாவில் மீண்டும் அதிர்ச்சி.. நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சடலம் கண்டுபிடிப்பு..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் கம்லூப்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் பூர்வகுடியின குழந்தைகள் பள்ளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பல வருடங்களுக்கு முன்  காணாமல் போன பூர்வகுடியின மக்களின் குழந்தைகளின் உடல்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த குழந்தைகள் எப்போது இறந்தது?

இறப்பிற்கான காரணம் என்ன? பெற்றோர்களிடம் ஏன் குழந்தைகளின் இறப்பை தெரியப்படுத்தவில்லை? என்ற எந்த கேள்விக்கும் பள்ளி நிர்வாகத்திடம் பதில் இல்லை. ஏனெனில் பள்ளி நிர்வாகம் பல பேரின் பராமரிப்பில் இருந்து மூடப்பட்டுவிட்டது.

இந்நிலையில், தற்போது Saskatchewan என்ற மாகாணத்தில் இருக்கும் Marieval Indian Residential என்ற அடைக்கப்பட்ட பூர்வகுடியின பள்ளியிலும்,  நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக கனடாவின் பழங்குடியின குழுவான The First Nations தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |