Categories
உலக செய்திகள்

“குழந்தைகள் இந்த இணையத்தொடரை பார்க்கக்கூடாது !”.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பள்ளிகள், நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா பரவி வருவதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எனவே, அதிகமான நேரத்தை தொலைபேசியில் தான் செலவிடுகிறார்கள். மேலும், இணைய வழியாக தான் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெற்றோர்கள் இருக்கும் போது பாடம் கவனிப்பது போல் பாவித்து விட்டு, அதன்பின்பு கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற கொரியன் வெப் தொடர், உலகம் முழுக்க பிரபலமானது.  இந்த வெப் தொடரின் கதைகளமானது, கொரியாவின் சில பழைய விளையாட்டுக்களை கொண்டு மனிதர்களை கொலை செய்வது போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், பல சிறுவர்கள் இந்த வெப் தொடரில் வரும் காட்சிகளை, மறு உருவாக்கம் செய்து டிக் டாக் போன்ற செயலிகளில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் குழந்தை நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் இந்த வெப் தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Categories

Tech |